கொரோனாவை வீழ்த்தி பணிக்குத் திரும்பிய காக்கிச்சட்டைகள்: அமோக வரவேற்பு

COVID-19 தொற்றிலிருந்து குணமான 72 போலீஸ் பணியாளர்கள் திங்களன்று மீண்டும் பணிக்குத் திரும்பினர். அவர்களை வேப்பேரியில் உள்ள நகர போலீஸ் கமிஷனரேட்டில் நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் கூடுதல் காவல்துறை ஆய்வாளர்கள் வரவேற்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 14, 2020, 10:18 AM IST
  • 1,500 க்கும் மேற்பட்ட போலீஸ் பணியாளர்கள் இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுள்ளனர்.
  • இதுவரை 847 காவல்துறையினர் குணமாகியுள்ளனர்.
  • பெரும்பாலானோர் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது தொற்றுக்கு ஆளானவர்கள்.
கொரோனாவை வீழ்த்தி பணிக்குத் திரும்பிய காக்கிச்சட்டைகள்: அமோக வரவேற்பு title=

கொரோனா (Corona) தொற்று உலகம் முழுவதும் பரவி உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. பலர் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில், மருத்துவத் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை போன்ற அத்தியாவசியத் துறைகளைச் சார்ந்தவர்கள் முன்னணி வீரர்களாக (Frontline Warriors) நின்று மக்களுக்கும் தொற்றுக்கும் நடுவில் நின்று போராடி வருகிறார்கள். இந்த முன்னணி வீரர்கள் பல முறை தங்கள் பணியை செய்யும்போது தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள். எனினும், குணமான பிறகு இவர்கள் மீண்டும் அதே உற்சாகத்துடன் பணிக்குத் திரும்புவது பாராட்டத்தக்க விஷயமாகும்.

கோவிட்-19 (Covid-19) தொற்றிலிருந்து குணமான 72 போலீஸ் (Policemen) பணியாளர்கள் திங்களன்று மீண்டும் பணிக்குத் திரும்பினர். அவர்களை வேப்பேரியில் உள்ள நகர போலீஸ் கமிஷனரேட்டில் நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் கூடுதல் காவல்துறை ஆய்வாளர்கள் வரவேற்றனர்.

1,500 க்கும் மேற்பட்ட போலீஸ் பணியாளர்கள் இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். அவர்களில் சென்னையில் மட்டும் 1,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது தொற்றுக்கு ஆளானவர்கள். இன்றுவரை, 847 காவல்துறையினர் குணமாகியுள்ளனர்.

ALSO READ: முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை... வெளியான பகீர் தகவல்!

பணிக்கு திரும்பிய காவல்துறையினருக்கு பொலிஸ் குழுவினர் அன்பான வரவேற்பு அளித்தனர். திரு. அகர்வால் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அகர்வால் கூறுகையில், “COVID-19 ஐ வீழ்த்தி நீங்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பியதற்கு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம். காவல்துறை மற்றும் பிற துறைகளின் ஊழியர்கள் போன்ற முன்னணி பணியாளர்கள் கடுமையாக உழைத்தால் COVID-19 இன் பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும்” எனக் கூறினார்.

Trending News