மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்துக்கு உட்பட்ட மாணிக்கபங்கு கிராமம் தெற்குதெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(68). விவசாயியான இவர் இன்று அதிகாலை தனது வீட்டிற்கு அருகே விஷம் அருந்தி இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொறையார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இறந்த கோவிந்தராஜிடம் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில்,
"எனக்கு சொந்தமான 27 சென்ட் இடத்தினை கடந்த 2015-ம் ஆண்டு மாணிக்கபங்கு வள்ளுவர்தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடம் சென்ட் ரூ.7 ஆயிரம் என்று விலைபேசி ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிகொண்டு ஒருவருட காலத்திற்குள் பாக்கி பணத்தை கொடுத்துவிட்டு இடத்தினை கிரயம் செய்து கொள்வது என்று அக்ரிமென்ட் போட்டோம்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிப் பதவிக்கு போட்டிபோடும் ‘எதிர்க்கட்சிகள்’!
அதன்பிறகு பல முறை அவரது மகன் சோமசுந்தரத்திடம் கூறியும் எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சோமசுந்தரம் இடத்தினை கிரயம் செய்துகொடுங்கள் என்று கேட்டார்.
அக்ரிமென்ட்; போட்டு காலாவதியாகிவிட்டது. அப்போது விற்ற விலை வேறு. தற்போது அதிக விலைக்கு விற்பனையாகிறது. அதனால் தற்போது சந்தை விலைக்கு பணம் கொடுங்கள். இல்லை என்றால் நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.
அதன்பிறகு திடீரென்று சோமசுந்தரம் எனது இடத்தில் கொட்டகை போட்டார். இடம் கிரயம் செய்து கொடுக்காமல் எப்படி கொட்டகை அமைக்கலாம் என்று கூறி பஞ்சாயத்தில் முறையிட்டபோது, இதுகுறித்து ஊர் பஞ்சாயத்தார்கள் பேச்சுவார்த்தைக்காக அழைத்தனர்.
மார்ச் மாதம் ஊர்பஞ்சாயத்திற்கு சென்றபோது என்னை மிரட்டி, அச்சுறுத்தி ரூ.20 லட்சம் விலைபோகும் இடத்தினை ரூ.4 லட்சத்திற்கு குறைந்த விலைக்கு நிலத்தை விற்பனை செய்வது என்று எழுதி வாங்கிகொண்டனர்.
என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார்கள். அதனால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது இடத்தில் போடப்பட்ட கொட்டகையை அகற்றி இடத்தை போலீசார் மீட்டுக்கொடுக்க வேண்டும். இதே கடிதத்தை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன்" என்று அந்த கடிதத்தில் கோவிந்தராஜ் எழுதிவைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஊர்பஞ்சாயத்தார்கள் மிரட்டி குறைந்த விலைக்கு இடத்தை விற்க வற்புறுத்தியதால் கோவிந்தராஜ் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR