இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 5,849 பேருக்கு கொரோனா உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இறந்து விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 பேர் என கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது...!

Last Updated : Jul 22, 2020, 07:38 PM IST
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 5,849 பேருக்கு கொரோனா உறுதி..! title=

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இறந்து விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 பேர் என கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது...!

தமிழகத்தில் இன்று மேலும் 5,849 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 5,849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 5,775 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 74 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 5,849 பேரில் சென்னையில் மட்டும் 1,171 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 89,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் 113 ஆய்வகங்கள் (அரசு - 58 மற்றும் தனியார் - 55) உள்ளன. அதில், இன்று மட்டும் 60.112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 20,96,757 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,481 பேர் ஆண்கள். 2,368 பேர் பெண்கள். மொத்தமாக 1,13,319 ஆண்களும், 73,150 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று மட்டும் 4,910 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கை 1,31,583 ஆக உள்ளது.

Image

Image

தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 74 பேர் உயிரிழந்தனர். அதில், 24 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,700 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,344 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த உயிரிழப்புகளுடன் 444 மரணங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 10 வரை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படடி 444 மரணங்கள் விடுபட்டது கண்டறியப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ALSO READ | Job Alert: கொரோனா காலத்திலும் வேலைவாய்ப்பின் களஞ்சியமாக விளங்கும் அரசின் வலைதளம்!!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்.... 

சென்னையில் 1,171 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 89,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 430 பேருக்கும், ராணிப்பேட்டையில் 414 பேருக்கும், விருதுநகரில் 363 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 325 பேருக்கும், தூத்துக்குடி 323 பேருக்கும், செங்கல்பட்டில் 223 பேருக்கும், திருச்சியில் 213 பேருக்கும், திருவண்ணாமலையில் 210 பேருக்கும், மதுரையில் 197 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 21 பேரும், கடலூரில் 8 பேரும், மதுரையில் 7 பேரும், விருதுநகரில் 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், திருவண்ணாமலை, வேலூரில் தலா 4 பேரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனியில் தலா 2 பேரும், கரூர், ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் என 74 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Trending News