தேனி மாவட்டம் அன்னஞ்சியில் அரசு திட்டப்பணிகள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், தொண்டர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் 114.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு இதுவரை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றி விட்டேன் எனக்கூறி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை எனவும் சிறய அளவில் மீதமுள்ள பணிகளும் விரைவில் முடித்துக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும், ஒவ்வொரு தனி மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் திமுக ஆட்சியின் நோக்கம் என குறிப்பிட்ட மு.க ஸ்டாலின், 5 வருட ஆட்சியில் செய்ய வேண்டிய சாதனைகளை திமுக அரசு ஒரே ஆண்டில் நிறைவேற்றி உள்ளது என பெருமிதத்துடன் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR