4 தொகுதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

Last Updated : Nov 22, 2016, 12:59 PM IST
4 தொகுதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம் title=

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்தல் மற்றும் பணப்புழக்கம் குற்றச்சாட்டு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் அதிமுக - எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்தார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் எம்.எல்.ஏ., ஜான்குமார் பதவியை ராஜினாமா செய்தார். இந்த 4 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஓட்டு எண்ணிக்கையின் முடிவுகள் பிற்பகல் 12 மணிக்கு  வெளியாகிவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கடந்த 19-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக அரவக்குறிச்சி 81.92 சதவீதமும், தஞ்சையில் 69.02 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 70.19 சதவீதமும், நெல்லித்தோப்பில் 85.52  சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

இன்று காலை  காலை 8 மணி அளவில் ஓட்டு எண்ணிக்கை தெடங்கியது, மேலும் பிற்பகல் 12 மணிக்கு அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம்     
அதிமுக: 72,213

திமுக: 47,417

பாஜக: 5,055

தேமுதிக: 2,888

தஞ்சாவூர்

அதிமுக: 1,01,646- வெற்றி

திமுக: 74,403

பாஜக: 1,491 

தேமுதிக: 661

அவரக்குறிச்சி

அதிமுக: 42,398

திமுக: 29,412

பாஜக: 1,132

தேமுதிக: 478

புதுவை நெல்லித்தோப்பு

காங்கிரஸ்: 18709 - வெற்றி

அதிமுக: 7526 

Trending News