தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 1358 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.... தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக உயர்வு..!
தமிழகத்தில் இன்று மேலும் 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 122 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 3,645 பேரில் சென்னையில் மட்டும் 1,956 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 49,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 191 பேருக்கும், மதுரையில் 203 பேருக்கும், திருவள்ளூரில் 170 பேருக்கும், தேனியில் 68 பேருக்கும், திருச்சியில் 27 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 89 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,317 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று வரையில் தமிழகத்தில் 9,92,991 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
READ | கொரோனா நோயாளிகளுக்கு பக்கவாதம், மன பாதிப்பை ஏற்படுகிறது - ஆய்வு!
இன்று அரசு மருத்துவமனையில் 31 பேரும், தனியார் மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் 37 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 3 பேரும், மதுரையில் 2 பேரும், விருதுநகர் ஒருவரும் என மொத்தம் 46 பேர் உயிரிழந்துள்ளதால், தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1358 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 32,305 பேர் சிகிச்சையில் உள்ளனர்.