விரைவில் தமிழகத்தில் 3,500 நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும்: செல்லூர் கே ராஜு!!

3,500 நடமாடும் ரேஷன் கடைகளை அரசாங்கம் திறக்கும் என்று அமைச்சர் செல்லூர் கே ராஜு புதன்கிழமை தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2020, 02:19 PM IST
  • சென்னையில் மட்டும் 400 கடைகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
  • கடன் வழங்குவதில் வணிக வங்கிகளுக்கு இணையாக தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகள் செயல்பட முடியும்.
  • நடப்பு ஆண்டில், விவசாய கடன்களுக்காக 11,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழகத்தில் 3,500 நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும்: செல்லூர் கே ராஜு!! title=

சென்னை: மலிவு விலை கடைகளில் (Ration Shops) கூட்டத்தைத் தவிர்க்க, மாநிலம் முழுவதும் 3,500 நடமாடும் ரேஷன் கடைகளை (Mobile Ration Shops) அரசாங்கம் திறக்கும் என்று அமைச்சர் செல்லூர் கே ராஜு புதன்கிழமை தெரிவித்தார். அவற்றில் 400 கடைகள் சென்னையில் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கான கடைகளை அடையாளம் காணும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்று கூறிய அமைச்சர் ராஜு, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் விரைவில் இந்த திட்டத்தை துவக்கி வைப்பார் என தெரிவித்தார்.

அதிக அளவிலான மலிவு விலைக் கடைகளுக்கான தேவையை சுட்டிக்காட்டிய அமைச்சர் செல்லூர் கெ ராஜு (Sellur K Raju), இந்த மொபைல் கடைகள் தற்போதுள்ள கடைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க உதவும் என்றார். அதிக மக்கள் தொகைக் கொண்ட பகுதிகளில் இவை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தனது துறையின் கீழ் உள்ள 32,970 கடைகளின் ஒருங்கிணைப்பின் மூலம், லாக்டௌன் காலத்தில், 98 சதவீத மக்களுக்கு அரசாங்கம் பண நிவாரணம் மற்றும் இலவச ரேஷனை வழங்கியுள்ளது என்று அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

ALSO READ: வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.. வீதிகளில் வேண்டாம்: TN Govt

குறிப்பாக பருவ மழைக்குப் பின்னர் கிராமப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க, தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகள் விவசாயக் கடனைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளன. இந்த நுண்நிதி வங்கிகள் (Microfinance Banks) இப்போது கணினிமயமாக்கப்பட்டு தானியங்கி முறையில் செயல்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது. கடன் வழங்குவதில் வணிக வங்கிகளுக்கு இணையாக இவை செயல்பட முடியும், என்றார் அமைசர்.

நடப்பு ஆண்டில், விவசாய கடன்களுக்காக 11,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவ போதுமான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 9,000 கோடி ரூபாய்க்கு மேல் வட்டி இல்லாத கடன்களாக விநியோகிக்கப்பட்டது என்பதையும் அமைச்சர் நினைவூட்டினார். 

ALSO READ: உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அரசு வெளியீடு

Trending News