பொங்கள் பண்டிகையை முன்னிட்டு 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் MR விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!

Last Updated : Dec 27, 2018, 06:59 PM IST
பொங்கள் பண்டிகையை முன்னிட்டு 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! title=

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் MR விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகவும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் தேவைக்காவும் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று மாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் MR விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் MR  விஜயபாஸ்கர் தெரிவிக்கையில் ‘‘பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 14,263 பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஜனவரி 9-ஆம் தேதி முதல் நடைபெறும். பொங்கள் முடிந்து சென்னைக்கு திரும்புவதற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’  என தெரிவித்தார்.

முன்னதாக தீபாவளி பண்டிகைக்கு, பயணிகளின் தேவைக்கு ஏதுவாக தமிழக அரசு 20,567 சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இதற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவுக் கவுண்டர்கள், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள், பூந்தமல்லி மற்ரும் மாதவரம் பேருந்து நிலையங்களில் தலா 1 கவுண்டர் இயக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது பொங்கள் பண்டிகைக்கு வரும் ஜனவரி 9-ஆம் தேதி முன்பதிவு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளி முன்பதிவு மையங்களில் மீண்டும் பொங்கள் முன்பதிவு மையங்கள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News