அத்தியாவசிய பணிகளுக்கு 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்!

சென்னையில் அத்தியாவசிய, அவசரப் பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 10, 2021, 10:30 AM IST
அத்தியாவசிய பணிகளுக்கு 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்! title=

சென்னை: கொரோனா இரண்டாம் அலை உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 நெருங்கிவருவதால், மாநிலத்தில் இன்று முதல் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததுள்ளது. இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கப்படும். 

அந்தவகையில் இந்த முழு ஊரடங்கில் (Lockdown) காய்கறிகள், மளிகை கடைகள், பல சரக்கு கடைகள், இறைச்சி கடைகள் இன்று நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படவுள்ளன. மேலும் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்டோ, டேக்சிக்கள் கூட இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ALSO READ | Total Curfew in Tamil Nadu: இன்று முதல் லாக்டவுன், எவை இயங்கும்? கட்டுப்பாடுகள் என்ன?

இந்நிலையில் தற்போது சென்னையில் (Chennai) அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியிருப்பதாவது.,

சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக இன்று 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா (Coornavirus) விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க வேண்டும். மேலும் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News