சூடான பானிபூரி குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை பலி!

கும்பகோணம் அருகே சூடாக இருந்த பானிபூரி குருமாவில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2022, 06:42 PM IST
  • வீட்டில் செய்து அண்டானுடன் இறக்கி வைத்த பானிபூரி குழம்பில் தவறி விழுந்த சிறுவன் பலி.
சூடான பானிபூரி குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை பலி! title=

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே செட்டிமண்டபம், ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

இவரது மனைவி அனுசுயா (28), தங்கள் வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு ரிஷி (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.  

இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி மாலை பானிபூரிக்கு குருமா தயார் செய்து அண்டான் ஒன்றில் சூடாக கீழே இறக்கி வைத்துள்ளார்.

மேலும் படிக்க | நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ

பின்னர் பிற பணிகளை செய்வதற்காக அனுசுயா சென்றுவிட்டார். கவனிப்பார் இல்லாத அந்நேரத்தில் அவ்வழியே வந்த குழந்தை ரிஷி விளையாடியபடி தவறி குறுமா அண்டானுக்குள் விழுந்துள்ளான்.

இதில் சூடு காயமுற்று குழந்தை ரிஷி கதறியுள்ளான். அவனின் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் அவரை மீட்டு அம்மாசத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

Rishi

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற ரிஷி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி குழந்தை ரிஷி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து, திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை ரிஷியின் இறப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | இப்படி செஞ்சா கள்ளழகர் சிலைக்கே பாதிப்பு : எச்சரிக்கும் பட்டர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News