நடனத்திற்கான சாம்பியன்ஷிப்... 2 தமிழக பிரேக் டான்சர்கள் தேர்வு - தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை

TN Latest News Updates: நடனத்தை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்திருக்கும் நிலையில், அதற்கான சாம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 28ஆம் தேதி சீனாவில் நடைபெறுகிறது. இதில் இரண்டு தமிழர்கள் தேர்வாகி உள்ளனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Sep 4, 2024, 11:24 PM IST
  • ஆராதனா மற்றும் பிரேம் காந்தி இரண்டு பேர் தேர்வு
  • இவர்கள் சீனா செல்ல தமிழ்நாடு அரசிடம் நிதி உதவி கோரியுள்ளனர்.
  • இவர்கள் 2026இல் யூத் ஒலிம்பிக்கில் தேர்வாக ஆசை எனவும் தெரிவித்துள்ளனர்.
நடனத்திற்கான சாம்பியன்ஷிப்... 2 தமிழக பிரேக் டான்சர்கள் தேர்வு - தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை title=

Tamil Nadu Latest News Updates: மேடைகளிலும் பல்வேறு விழாக்களிலும் கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் நடைபெறக்கூடிய கலை நிகழ்ச்சிகளில் காண்கின்ற நடனம் இன்று ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நடனம் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

கடந்த மாதம் சென்னை தமிழ்நாடு அரசு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான நடன போட்டியில் பிரேக் டான்ஸ், லத்தின் டான்ஸ், மற்றும் ப்ரீ ஸ்டைல் உள்ளிட்ட மூன்று வகையான போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து இரண்டு நபர்கள் ஆராதனா மற்றும் பிரேம் காந்தி ஆகிய இணையருக்கான சாம்பியன்ஷிப் சீனாவில் செப்.28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்காக தமிழ்நாடு அரசு சீனாவுக்கு சென்று வருவதற்கான நிதி உதவி வழங்கி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

2 தமிழர்கள் தேர்வு

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆல் டான்ஸ் சங்கத்தின் பொதுச்செயலாளர் சித்தேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"சென்னை தமிழ்நாடு அரசு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான நடனப் போட்டிகள் நடைபெற்றது. அப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆராதனா மற்றும் பிரேம் காந்தி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். 

மேலும் படிக்க | ஆதார் கைரேகை புதுப்பிப்பு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்

இவர்கள் இருவரும் சீனாவில் இம்மாதம் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றால் ரேங்கிங் அடிப்படையில் 2026யில் நடைபெறக்கூடிய யூத் ஒலிம்பிக் கேம்ஸில் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள். நடனத்தை ஒரு கலை நிகழ்ச்சியாக பார்க்காமல் ஒரு விளையாட்டாக தேர்ந்தெடுத்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவே, சீனாவில் நடைபெறக்கூடிய போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த இருவரும் வெற்றி பெறுவார்கள் இவர்களுக்காக தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு அரசு உதவ வேண்டும்

தொடர்ந்து பேசிய பிரேக் டான்சர் பிரேம் காந்தி,"கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக பிரக் டேன்ஸ் நடனம் ஆடி வருகிறேன், தமிழ்நாடு அரசு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான போட்டியில் தேர்வாகியுள்ளேன். சீனாவில் நடைபெறக்கூடிய போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்று 2026 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய யூத் ஒலிம்பிக் கேமில் பங்கு பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும். எனவே தமிழக அரசு தங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய பிரேக் டான்சர் ஆராதனா, "உலக இனையோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இந்தியாவிற்காகவும் குறிப்பாக தமிழகத்துக்கும் பல பெருமகளை சேர்ப்போம். ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் தேர்வாகியுள்ளோம். எனவே சீனாவில் நடைபெறக்கூடிய போட்டியிலும் தேர்வாகவும் இந்த நம்பிக்கை உள்ளது. எனவே அரசு தங்களின் கோரிக்கையை ஏற்று உதவி செய்ய வேண்டும்" என்றார். 

மேலும் படிக்க | ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தங்கவேல் மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News