மலேசியா சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த 14 பேர் சாதனை! குவியும் பாராட்டுகள்

Coimbatore Yoga Practioners Won Medals: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளனர்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2024, 07:45 AM IST
  • மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டிகள்
  • கோவையை சேர்ந்த 14 பேர் பதக்கம் வென்று சாதனை
  • திருமணமான பெண்களும் பதக்கம் வென்றனர்
மலேசியா சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த 14 பேர் சாதனை! குவியும் பாராட்டுகள் title=

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளனர். திருமணமான பெண்கள் உட்பட இதில் கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற்றி கவனத்தை ஈர்த்துள்ளனர்.. 

தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. கடந்த 15 ந் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

யோகா போட்டிகளில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில், ஐந்து வயது முதல் ஐம்பது வயதிற்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டனர். இதில், ஆர்ட்டிஸ்டிக், ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம், சக்ராசனம் என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடைபெற்றன.

மேலும் படிக்க | EPFO கணக்கில் ஒரே நிமிடத்தில் நாமினியை மாற்றுவது எப்படி? ரொம்ப சிம்பிள்

மலேசியாவில் நடைபெற்ற இந்த யோகா போட்டியில், கோவையை சேர்ந்த பிராணா யோகா மையத்தின் ஜெயலட்சுமி, மோகன்ராஜ் ஆகியோர் நடுவர்களாக பங்கு பெற்றனர். இது குறித்து யோகா பயிற்சியாளர் ஜெயலட்சுமி கூறுகையில், தற்போது உடல் ஆரோக்கியம், மன அழுத்தத்தில் இருந்து விடுபட என பலர் யோகா கற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

யோகா மையத்திற்கு வந்து யோகா பயிற்சி செய்பவர்கள், அதில் ஏற்படும் ஆர்வத்தால் தேசியப் போட்டிகளிலும், சர்வதேச போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொள்வதாக யோகா பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.  இது போன்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களை பார்த்து பிறருக்கும் யோக பயிற்சிகளில் விருப்பம் அதிகரிப்பதாகவும், யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதாகவும் தெரிவித்தனர்.

பிராணா யோகா மையத்தில் பயற்சி பெற்று மலேசியா சர்வதேச யோகா போட்டியில் பதக்கம் வென்றவர்களில், பள்ளி மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மாணவர்கள் மட்டுமின்றி, திருமணமான பெண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஒரே மாதத்தில் தொப்பை குறைய இந்த 3 எளிய யோகாசனங்களை தினமும் செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News