பொருளாதாரத்தில் பின்தங்கிய, மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திருமணம்

டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் திருமணத்திற்கான சிறந்த சுற்றுலாதலமாக மாமல்லபுரத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் 3 ஆம் நாளான இன்று, மிகபிரமாண்டமாக இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.   

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 5, 2023, 02:00 PM IST
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளிகளாக உள்ள 101 ஜோடிகளுக்கு திருமணம்.
  • மாமல்லபுரத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு.
  • 3 ஆம் நாளான இன்று, மிகபிரமாண்டமாக இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய, மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திருமணம் title=

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளிகளாக உள்ள 101 ஜோடிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திருமனம் செய்துவைக்கப்பட்டது.  பொருளாதாரத்தை தாண்டி ஒவ்வொருவரின் திருமண கனவையும் நிறைவேற்றவும், திருமணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல முன்னுதாரண நிகழ்வாக இருந்தது.

பசுமை  தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, அதிமுக செய்தித் தொடர்பாளர் அப்சராரெட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, டபிள்யூ. வி.கனெக்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி தட்சிணாமூர்த்தி, இயக்குனர் நந்தினி விஜய் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் திருமணத்திற்கான சிறந்த சுற்றுலாதலமாக மாமல்லபுரத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் 3 ஆம் நாளான இன்று, மிகபிரமாண்டமாக இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. 

101 புதுமண தம்பதிகளுக்கும், தாலி, பட்டுப்புடவை, வேட்டி சட்டை, 1 மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், படுக்கை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. 

பொருளாதாரத்தை தாண்டி ஒவ்வொருவரின் திருமண கனவையும் நிறைவேற்றவும், திருமணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, வெட்டிங் வோவ் வி கனெக்ட் 2023 - ஆசியாவின் பிரமாண்டமான சர்வதேச தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்தியாவில் திருமணம் செய்ய ஏற்ற சுற்றுலாதலங்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மாநாடு, இம்முறை மாமல்லபுரத்தை பிராதனப்படுத்தும் நோக்கில் தொடங்கியது.

ஆடம்பரங்கள் நிறைந்த ரேடிசன் ப்ளூ ரிசார்ட் டெம்பிள் பே உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட நட்சத்திர  மற்றும் ஓய்வு விடுதிகள் நிறைந்த மாமல்லபுரம் பாரம்பரிய அழகுடன்  கற்பனை மிகுந்த இடமாக விளங்குகிறது.

தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் 2 ஆம் நாளான நேற்று, தொழில் வல்லுநர்களின் முக்கிய உரைகள், குழு விவாதங்கள், பட்டறைகள் மற்றும் நெட்வொர்க்கிங் அமர்வுகள் உட்பட பலதரப்பட்ட செயல்பாடுகள் இடம்பெற்றன.

பங்கேற்பாளர்கள் சப்ளையர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களுடன் தொடர்பு கொள்ளவும், சமீபத்திய தொழில் முன்னேற்றங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறவும் வாய்ப்பைப் பெற்றனர்.

மேலும் படிக்க | தலைசிறந்த திருமண தலமாக உருவெடுக்கவுள்ள மாமல்லபுரம்: முழு முனைப்பில் பணிகள்

ஜியோ பவுண்டேஷன் மற்றும் மதர் எர்த் பவுண்டேஷன் ஆகியற்றுடன் இணைந்து தேவையுடைய 101 ஜோடிகளை மிக கவனமாக தேர்ந்தெடுத்ததாகவும் டபிள்யூ.வி. கனெக்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News