சூர்யா-க்கு ஜோடியாகும் பிரியா பிரகாஷ் வாரியர்!

சூர்யா-ன் அடுத்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகும் புருவ புயல் பிரியா பிரகாஷ் வாரியர்..! 

Last Updated : Mar 20, 2018, 01:27 PM IST
சூர்யா-க்கு ஜோடியாகும் பிரியா பிரகாஷ் வாரியர்! title=

கேரள பாடல்களுக்கும், பெண்களுக்கும் தமிழ் இளைஞர்கள் இடையே மவுசு எப்போதும் குறைவதில்லை!

சமிபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து தற்போது திரைக்குவர உள்ள "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலரே பூவே" பாடலின் வீடியொ கிலிப் ஒன்று தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  இப்பாடல் காட்சியில் வரும் ரொமான்டிக் காட்சி தான் தற்போது பலரது வாட்ஸ் அப் ஸ்டேடஸ். 

புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் மாணிக்ய மலரே பூவி என்ற பாடல். 

இந்த பாடல் யூ-டியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. ஒரே நாளில் சன்னி லியோனையே பின்னுக்குத்தள்ளியாவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். 

அவரை தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து உள்ளனர். அதனை பயன்படுத்தி பிரியா வாரியார் பணம் சம்பாதிக்க துவங்கியுள்ளார்.சில நிறுவனங்கள் விளம்பரத்திற்காக பிரியாவை அனுகியுள்ளன. 

பிரியா பிரகாஷ் வாரிய ஒரு பதிவுக்கு சுமார் 8 லட்ச ருபாய் வாங்கிக்கொண்டு ப்ரியா விளம்பரம் செய்து கொடுக்கிறாராம். இதையடுத்து பிரியா பிரகாஷ் வாரியரை போன்றே பாலிவுட் நடிகைகளும் அந்த பாடலுக்கு டப்பிங் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மலையாள திரையுலகை தெரிக்கவிட்ட புருவ புயல் பிரியா பிரகாஷ் வாரியார் அடுத்ததாக தமிழில் சூர்யாவுடன் ஜோடி சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யா-க்கு ஜோடியாக புதிய படத்தில் பிரியா பிரகாஷ் வாரியாரை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படத்தில் பிசியாகியுள்ள சூர்யா அடுத்ததாக கே.வி ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் என கூறுகின்றனர். 

கே.வி ஆனந்த் இயக்கும் படத்தில் பிரியா வாரியர் சூர்யா-க்கு ஜோடி சேர்கிறார் என அனைவரும் எதிர்பார்கின்றனர். தற்போது வரை தமிழ் சினிமாவில் அதிகமாக அறிமுகமாகும் கதாநாயகிகள் மலையாள பெண்கள் தான் அந்தவகையில் சூர்யா-க்கு பிரியா வாரியர் ஜோடியாகிறார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை...!

Trending News