கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100_வது நாள் போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடைபெற்றதால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போராட்டத்தின் ஒரு பகுதியாக வன்முறையில் ஈடுபட்டதாக 145 பேர் கைது செய்யப்பட்டன.
பின்னர் அவர்களில், கடந்த 24-ம் தேதி மாவட்ட நீதிமன்ற உத்தரவையடுத்து 65 பேர் விடுதலைச் செய்யப்பட்டனர். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களில் விடுதலை செய்ய நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து, மேலும் 74 பேரை விடுதலை செய்து மாவட்ட நீதிமன்ற தலைமை நீதிபதி சாருஹாஷினி உத்தரவிட்டுள்ளார். வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் இதுவரை 139 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.