தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், அவரது முன்னாள் கணவர் லிங்கேஸ்வர திலகனுக்கும் சில நாள்களுக்கு முன்பு விவாகரத்து அளிக்கப்பட்டது. அதையடுத்து, சசிகலா புஷ்பா ஓரியன்டல் பல்கலைக்கழகத் துணைவேந்தரான ராமசாமியை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து ராமசாமி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி சத்யபிரியா புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து மதுரை குடும்ப நல கோர்ட்டில் சத்யபிரியா வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட், சத்யபிரியா- ராமசாமி விவகாரத்து வழக்கு கோர்டில் நிலுவையில் உள்ளதால் ராமசாமி 2வது திருமணம் செய்யக்கூடாது என மதுரை குடும்ப நலகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கும் நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசராக உள்ள மதுரை பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் இரு தரப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
தற்போது சசிகலா-ராமசாமி திருமண வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ADMK Expelled MP Sasikala Pushpa , Ramaswamy marriage took place in delhi, midst of court stay for her marriage.
She hasn't cared about the court order.#sasikalapushpa pic.twitter.com/mOPmspLhoX
— Stephen (@SteveNews1) March 26, 2018
Wait! Isn't the husband supposed to lead the wife!?!? #sasikalapushpa pic.twitter.com/vKu6NuRRVg
— Pramod Madhav (@madhavpramod1) March 26, 2018