முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது

சாதிரீதியாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சில மணி நேரத்தில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 18, 2021, 10:24 AM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது title=

கடந்த ஜூன் 2020 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி சாதி ரீதியான கருத்துகளை விவாதித்தனர். சாதி குறித்து அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. 

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து வழக்கு நிலுவையில் இருந்தது, இதனையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவினால் யுவராஜ் சிங் (Yuvraj Singh) கைது செய்யப்பட்டு சிறிது நேரம் சிறையில் வைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ALSO READ | ஐபிஎல் 2021ல் மேட்சை மாற்றிய 5 பவுலர்கள்!

இதையடுத்து யுவரான் சிங் தனது ட்விட்டர் கடந்த ஆண்டு பகிரங்க மன்னிப்பு கோரினார். அப்போது நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி விட்டேன். நான் வேண்டுமென்றே யாருடைய உணர்வுகளையாவது காயப்படுத்தியிருந்தால், நான் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என கூறியிருந்தார். 

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தலித் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் கீழ் யுவராஜ் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்தநிலையில் இது தொடர்பாக நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். மேலும் மூன்று மணிநேர விசாரணைக்குப் பிறகு, அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 153 A மற்றும் 505 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் யுவராஜ் சிங்கின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிய வந்தது. அந்த விசாரணை போது தாம் கூறியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் மன்னிப்புக் கேட்பதாகவும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

அதன்படி இந்த வழக்கில் அவர் ஏற்கெனவே மன்னிப்பு கோரியிருந்ததால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ALSO READ | ஆலோசகராக தோனி: விராட் கோலியின் கருத்து என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News