இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்திய அணி (Team India) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொதுவான இடத்தில் விளையாடப்போகும் முதல் டெஸ்ட் இதுவாகும். மேலும் விராட் கோலி (Virat Kohli) தலைமையில் இந்திய அணி எந்த ICC கோப்பையையும் வென்றதில்லை. இதேபோல் நியூசிலாந்து (New Zealand) அணி கடந்த இரண்டு உலக கோப்பை போட்டிகளின் இறுதிசுற்றில் தோற்று இருக்கிறது. இரு அணிகளும் ஐ.சி.சி. கோப்பையை கையில் ஏந்தும் தருணத்துக்காக காத்திருப்பதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ALSO READ | இந்த 3 New Zealand வீரர்கள் WTC இறுதிப் போட்டியில் இந்தியாவை அச்சுறுத்தலாம்
இந்த நிலையில் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
தனிமைப்படுத்துதல் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் 15 நாட்களுக்கு முன்பே இங்கிலாந்துக்கு சென்று விட்டனர்.
ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் இந்திய அணி 1983-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பை, 2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை, 2011-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பை, 2002-ம் ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை இலங்கையுடன் பகிர்வு, 2013-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை இப்படி 5 கோப்பைகளை வென்று இருக்கிறது.
இந்த மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்டில் விளையாடி இரண்டிலும் தோற்று இருக்கிறது. நியூசிலாந்து இங்கு டெஸ்டில் கால்பதிப்பது இதுவே முதல்முறையாகும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இங்கு 4 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியார்களின் விவரம்:
இந்தியா அணி: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்யா ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா.
நியூசிலாந்து அணி: டிவான் கான்வே, டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் அல்லது வில் யங், வாட்லிங், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.
ALSO READ | WTC Final: இந்த 2 பேர் வெற்றியை பெற்றுத் தருவார்கள், ரகசியத்தை போட்டுடைத்த கவாஸ்கர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR