18 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்!

India vs Pakistan: கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் சொல்லப்படுகிறது.

Written by - RK Spark | Last Updated : Jul 30, 2024, 01:24 PM IST
  • டெஸ்ட் போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான்?
  • WTC போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.
  • ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்! title=

India vs Pakistan: இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் எதிரிகளை தாண்டி, கிரிக்கெட்டிலும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றனர். இந்தியா  - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் குதூகலம் ஆகிவிடுவார்கள். தற்போது இரண்டு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். கடைசியாக இந்திய அணி பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டபோது, ​​சௌரவ் கங்குலி மற்றும் அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் விளையாடி கொண்டு இருந்தனர். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. டிசம்பர் 2007ம் ஆண்டுக்கு பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெறவில்லை. இரண்டு நாடுகளும் இருதரப்பு தொடர்களுக்காக சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மும்பையில் இருந்து விலகும் ரோஹித் சர்மா... ரெடியாக இருக்கும் இந்த 5 அணிகள் - யாருக்கு கிடைக்கும் லக்?

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக இந்தியாவும் - பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் இதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது அதிகமாகி உள்ளன. 2023-25 ​​உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் சுழற்சியின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணி இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்சிப்களிலும் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இருப்பினும் கோப்பையை வெல்ல தவறியது. இந்தியா தற்போது 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்சிப் அட்டவணையில் 68.52 சதவீத புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. எனவே இந்த முறை இறுதிப் போட்டிக்கு செல்வது அவ்வளவு சுலபமாக இருக்காது. இருப்பினும், சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. மேலும் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய அணிக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும். மறுபுறம் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என்றால், இன்னும் அதிக வெற்றி தேவைப்படுகிறது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ​​சுழற்சியில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 36.66 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி. இதுவரை மொத்தமாக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த ஆண்டில் பாகிஸ்தான் அணி வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு WTC இறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளது. இது தவிர இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாட எங்களது மைதானங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் - ரவி சாஸ்திரி எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News