உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி 2018: "ஃபிளே ஆப்" சுற்று தகுதி பெற்ற இந்தியா

பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய மற்றும் அமெரிக்க மோதிய லீக் ஆட்டம் 1-1 என டிரா ஆனது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 30, 2018, 02:33 AM IST
உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி 2018: "ஃபிளே ஆப்" சுற்று தகுதி பெற்ற இந்தியா title=

இங்கிலாந்தில் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியா அணி "பி" பிரிவில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெரும். 2 மற்றும் 3 வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் "ஃபிளே ஆப்" சுற்று ஆட்டத்தில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெரும்.

இந்தியாவை பொருத்த வரை தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. முதல் ஆட்டம் (1-1) டிராவானது. இரண்டாவது ஆட்டத்தில் அயர்லாந்து அணியிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் காலிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் அமெரி்க்காவுடனான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் கண்டது.

இந்தியா, அமெரிக்க ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் அமெரிக்காவின் மார்கஸ் பவொலினோ முதல் கோல் அடித்தார். அமெரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று விளையாடியது. 31வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை கோலாக மாற்றினார் இந்திய வீராங்கனை ராணி ராம்பால். இந்த கோல் மூலம் 1-1 என சமநிலை பெற்றது. 47 வது நிமிடம் அமெரிக்க வீராங்கனை அடுத்த கோலை இந்திய வீராங்கனை குர்ஜித் அற்புதமாக தடுத்தார். பின்னர் இரண்டு அணிகளும் கோல் போடா முயற்ச்சி செய்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் மேற்கொண்டு கோல் போடாததால், ஆட்டம் டிரா ஆனது.

 

இந்திய அணி வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் டிரா ஆனதால், இந்திய அணி "ஃபிளே ஆப்" சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. "ஃபிளே ஆப்" சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெரும்.

 

Trending News