இன்றும் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்... உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மிரட்டல்!

Nikhat Zareen Lovlina Borgohain Won Gold Medal: உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன், லவ்லினா போர்கோஹைன் ஆகிய இருவரும் தங்கம் வென்று சாதனை படைத்தனர். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 26, 2023, 08:23 PM IST
  • லவ்லினா முதல்முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.
  • நிகத் ஜரீன் இரண்டாவது முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.
  • மொத்தமாக இந்தியா 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
இன்றும் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்... உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மிரட்டல்! title=

Nikhat Zareen Lovlina Borgohain Won Gold Medal: சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் கடந்த மார்ச் 16ஆம் தேதியில் இருந்து டெல்லியில் நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று நடைபெறும் வெவ்வேறு பிரிவுகளின் இறுதிப்போட்டிகளில், இந்தியா சார்பில் வீராங்கனைகள் தகுதிபெற்றிருந்தனர். 

தக்கவைத்த ஜரீன்

இந்நிலையில், 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன், வியட்னாமின் ஙுயென் தி தம் என்ற வீராங்கனையுடன் மோதினார். இதில், முழுமையாக ஆதிகத்தை செலுத்திய நிகத் ஜரீன் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, தனது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்தார். 

மேலும் படிக்க | Women's World Boxing Championships: ஒரே நாளில் 2 தங்கம்... வெற்றி வாகை சூடிய நிது கங்காஸ், சாவீட்டி பூரா!

இந்த போட்டியில் தங்கம் வென்றதன்மூலம், நிகத் ஜரீன் உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் தனது இரண்டாவது தங்கத்தை பெற்றார். மேலும், நடப்பு தொடரில் இது இந்தியாவின் மூன்றாவது தங்கப்பதக்கமாகும். நேற்று நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் நிது கங்காஸூம், 81 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் சாவீட்டி போராவும் தலா ஒரு தங்கத்தை வென்று அசத்தியிருந்தனர்.

லவ்வினோவுக்கு முதல் தங்கம்

மேலும், இந்த தொடரின் 72 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் பார்க்கருடன் மோதினார்.

பார்க்கரை 5-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, முதல்முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கதை வென்றார். இதன்மூலம், இந்தியா இந்த உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், மொத்தம் நான்கு தங்கப்பதக்கங்களை குவித்து, தொடரை நிறைவு செய்தது.

மேலும் படிக்க | IPL 2023: காயத்தால் ஐபிஎல் தொடரை தவறவிடும் வீரர்கள்... இதோ முழு லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News