அகமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை நேர்வு செய்தது. முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. தொடரை நிர்ணயிக்கும் வாழ்வா? சாவா? போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதல் சிறப்பாக பந்து வீசியது.
மேலும்படிக்க | மும்பை அணி இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுத்த 5 வீரர்கள்
இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த போட்டியில் அரைசதமடித்த அவர், இப்போட்டியில் ரோச் பந்துவீச்சில் சாய் ஹோப்பிடம் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். முதன்முறையாக சீனியர் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரிஷப் பன்ட் 34 பந்துகளில் 18 ரன் எடுத்திருந்தபோது அவுட்டானார். இவரது விக்கெட்டை வீழ்த்திய ஸ்மித், அதே ஓவரில் முன்னாள் கேப்டன் விராட் கோலியையும் வெளியேற்றினார்.
43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்த இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் சரிவில் இருந்து மீட்டனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் முறையே 64 மற்றும் 49 ரன்களுக்கு அவுட்டாகினர். அடுத்து களம் புகுந்த வாஷிங்டன் சுந்தர் 24 ரன்களும், தீபக்ஹூடா 29 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்தது. 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது
மேலும் படிக்க | 2வது ஒருநாள் போட்டியில் ரோகித்சர்மாவுடன் களமிறங்கிய ரிஷப் பந்த்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR