இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் போட்டி அட்டவணை

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நடைபெற போட்டிகளில் குறித்து முழு அட்டவணை.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 4, 2019, 05:06 PM IST
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் போட்டி அட்டவணை title=

புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு எதிராக முதல் டி-20 போட்டி ஆரம்பமாக உள்ளது. மேலும் இரு அணிகளும் மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி டி-20 கிரிக்கெட்டின் நடப்பு உலக சாம்பியனாக உள்ளது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கை பலவீனமாக உள்ளது. இந்தியாவின் கைதான் ஓங்கி உள்ளது. 

இதனால் தற்போது நடைபெற உள்ள போட்டிகளில் இந்திய அணி தான் தொடரை கைப்பற்றும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர். ஏனென்றால், தொடர் நடைபெறுவது, இந்திய மண்ணில், மேலும் சமீபகாலமா இந்திய அணி தொடர்ந்து தொடர்களை கைப்பற்றி வருகிறது.

இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற உள்ளது. அதற்கு முன்பு இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி ஆட்டம் புதன்கிழமை நடக்க உள்ளது. 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே இந்திய மண்ணில் இதுவரை மொத்தம் 14 டி 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் எட்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல ஐந்து போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதில் முக்கியமான விசியம் என்னெவென்றால், ஜூலை 2017 வரை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா இரண்டு டி 20 போட்டிகளில் மட்டுமே வென்று இருந்தது. அப்போதும் வெஸ்ட் இண்டீஸ் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதாவது, வெற்றி தோல்வி 5-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதகமாக இருந்தது. இதன் பின்னர், இந்தியா இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வென்றது, இந்த எண்ணிக்கையை 8-5 என்ற கணக்கில் முன்னோக்கி சென்றது. 

T20 போட்டி அட்டவணை: 
முதல் டி-20 போட்டி: மும்பை - டிசம்பர் 6 
2 வது டி-20 போட்டி: திருவனந்தபுரம் - டிசம்பர் 8 
3 வது டி-20 போட்டி: ஹைதராபாத் - டிசம்பர் 11 

ஒருநாள் போட்டிகள் அட்டவணை: 
முதல் போட்டி: சென்னை - டிசம்பர் 15 
2 வது போட்டி: விசாகப்பட்டினம் - டிசம்பர் 18 
3 வது போட்டி: கட்டாக் - டிசம்பர் 22

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி 20 இந்திய அணி:- விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷாமி குமார், வாஷிங்டன் சுந்தர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் இந்திய அணி:- விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் சாஹர், புவனேஷ்வர் குமார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News