உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள பி.வி. சிந்துவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை வாங் யிகானை 22-20, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறிய 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் கடந்த 2012-ல்
நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய சாய்னா நேவல் வெண்கலம் வென்றார். நாளை நடக்கும் அரையிறுதியில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் நோஜோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார்.
அரையிறுதிக்கு முன்னேறிஉள்ளார். பிவி சிந்துவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.பி.வி. சிந்துவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டு உள்ள செய்தியில், நெ.2 வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்துவிற்கு பாராட்டுக்கள்,” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “சிறப்பான விளையாட்டிற்கும், வெற்றிக்கும் பிவி சிந்துவிற்கு பாராட்டுக்கள். அடுத்த சுற்றிலும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்,”என்று கூறி உள்ளார்.
YES! YES! YES!
PV Sindhu storms into semi-final against Wing Yihan.
22-20 21-19#badminton #Rio2016 pic.twitter.com/sZTb9CE5LO— DrVatsa (@DocVatsa) August 16, 2016
@Pvsindhu1 main to tera jabra fan ho gaya!! More power to you!! Loved celebration #PVSindhu #Jeetatrio #GoForGold pic.twitter.com/gO51MKgC8o
— Gajanan Gaikwad (@gajanangaikwad) August 17, 2016