உலக கோப்பை: 3 போட்டிகளில் வெறும் 11 ரன்கள் அடித்த விராட் கோலி - மோசமான ரெக்கார்டு..!

விராட் கோலி இதுவரை விளையாடியிருக்கும் 3 உலக கோப்பை போட்டிகளிலும் அரையிறுதிப் போட்டியில் மொத்தமாக 11 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அனைத்து போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியிருக்கிறார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 14, 2023, 01:44 PM IST
  • விராட் கோலி மோசமான ரெக்கார்டு
  • அரையிறுதிப் போட்டியில் ஆடவில்லை
  • இதுவரை 11 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்
உலக கோப்பை: 3 போட்டிகளில் வெறும் 11 ரன்கள் அடித்த விராட் கோலி - மோசமான ரெக்கார்டு..! title=

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதாலவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 2019 ஆம் ஆண்டும் இந்த இரு அணிகளுமே அரையிறுதிப் போட்டியில் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியை கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மறந்திருக்கமாட்டார்கள். அந்த போட்டியில் தோனி அவுட்டாகும்போது பெவிலியனில் இருந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார் கேப்டன் ரோகித்சர்மா.

அதற்கு பதிலடி கொடுக்கவும் இந்திய அணிக்கு ஒரு சூப்பரான வாய்ப்பு மறுபடியும் கிடைத்திருக்கிறது. பேட்டிங்கில் சூப்பர் பார்மில் இருக்கும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்பட்சத்தில் இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

மேலும் படிக்க | 400 ரன்களை குவித்த இந்தியா - ராகுல், ஸ்ரேயாஸ் சதம் ... நெதர்லாந்து பவுலரும் சதம்..!

ஆனால் கடந்த கால வரலாறு என்ன சொல்கிறது என்று பார்த்தால் கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. ஏனென்றால் விராட் கோலி 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்த போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் என்ன தெரியுமா?, 9, 1,1 மட்டுமே. அதாவது 3 உலக கோப்பை அரையிறுதிப் போட்டிகளிலும்  விராட் கோலி ஒற்றை இலக்க ரன்களை கடக்கவில்லை.

இதுதான் இப்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.  அந்த தொடர்களிலும் லீக் போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் விராட்கோலி. நடப்பு உலக கோப்பை தொடர்களிலும் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் அவர். ஆனால் அரையிறுதிப் போட்டி என்றால் மட்டும் விராட் கோலிக்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. இந்த சோகத்துக்கு நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் முடிவு கட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | உலககோப்பை அரையிறுதிப் போட்டி: நீங்கள் கேள்விப்படாத 8 சுவாரஸ்யங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News