வழக்கமான இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இல்லாத நிலையில், இன்னிங்ஸைத் தொடங்கிய கோஹ்லி, நிதானமாக ஆடி ரன்கள் அடிக்க தொடங்கினார். இந்த போட்டியில் டி20யில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 2022 ஆசிய கோப்பையில் இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பினார் கோலி. கிரிக்கெட்டில் இருந்து ஒரு மாத இடைவெளி எடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 71வது சதத்துடன் தற்போது புல் பார்மில் உள்ளார். இருப்பினும், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஆசிய கோப்பை வென்று என்ன யூஸ்? உலக கோப்பைக்கு தகுதி பெறாத இலங்கை!
"விராட் விளையாடிய விதம், அவர் தனக்கென ஒரு பெயரை உருவாக்குவதற்கு முன்பு ஆரம்பத்தில் போராட்டம் இருந்தது. அவர் ஒரு சாம்பியன், நீங்கள் ஓய்வு பெறும் ஒரு கட்டம் வரும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அந்த சூழ்நிலையில் , அணியில் உயரத்தில் இருக்கும் போதே வெளியே செல்ல வேண்டும். அணி தானாக வெளியேற்றுவதற்கு முன்பு இதனை செய்து விட வேண்டும்" என்று அப்ரிடி கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 8ம் தேதி துபாயில் நடந்த ஆசிய கோப்பை 2022-ன் இந்திய அணியின் கடைசி போட்டியில் கோஹ்லி தனது முதல் டி20 சதத்தை பூர்த்தி செய்தார். மிக முக்கியமாக, 3 ஆண்டுகளுக்கும் மேலாக விராட் சர்வதேச போட்டியில் சதம் அடிக்காத நிலையில் தற்போது அடித்துள்ளார். 2019 நவம்பரில் ஒரு டெஸ்ட் போட்டியில் அவரது கடைசியாக சதம் அடித்து இருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக ரசிகர்கள் அவரது 71வது சதத்திற்காக காத்திருந்த நிலையில் இந்த சாதனையை புரிந்துள்ளார் கோலி.
மேலும் படிக்க |ரிஷப் பன்ட் முன்னாள் காதலிக்கு ரூட் போட்ட பாகிஸ்தான் இளம் வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ