ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவில் உள்ள அனைத்து அணிகள் தலா 1 போட்டியை விளையாடிவிட்ட நிலையில், தற்போது ஆடவர் டி20 போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் போட்டியில் சிறப்பாக விளையாடி 82 ரன்களை குவித்த விராட் கோலி, 5 இடங்கள் முன்னேறி 9ஆம் இடத்தை பிடித்துள்ளார். நீண்ட நாளுக்கு பின் டி20 தரவரிசையின் டாப் 10 பேட்டர்களுள் ஒருவராக விராட் கோலி இடம்பெற்றுள்ளார். அவர் 635 புள்ளிகளை பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (849) முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ், 828 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் அடித்து அதிரடி காட்டிய நியூசிலாந்து பேட்டர் டேவான் கான்வே 831 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Virat Kohli on the rise
The Indian star's sensational innings against Pakistan sees him surge up in the latest @MRFWorldwide ICC Men's T20I Player Rankings
Details https://t.co/Up2Id40ri0
— ICC (@ICC) October 26, 2022
தொடர்ந்து 799 புள்ளிகளுடன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நான்காவது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் 5ஆவது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடத்தில் சூர்யகுமார், கோலியை தவிர வேறு யாரும் இடம்பிடிக்கவில்லை. ரோஹித் சர்மா 16ஆவது இடத்திலும், கேஎல் ராகுல் 18ஆவது இடத்திலும் உள்ளனர்.
டி20 பந்துவீச்சு தரவரிசையில், ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 10ஆவது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசையில், ஷாகிப் அல்-ஹாசன் முதலிடத்தில் உள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
There's a new No.1 in town
Afghanistan ace is back on top in the @MRFWorldwide ICC Men's T20I Player Rankings
Details https://t.co/F71v1c89o2
— ICC (@ICC) October 26, 2022
மேலும் படிக்க | இந்திய அணிக்கு கொடுக்கப்படும் தரமில்லாத உணவுகள்! வேண்டுமென்றே சதியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ