IND vs PAK : அவரு எங்கையோ போய்ட்டாருங்க... அஸ்வினை கொண்டாடி தீர்த்த கோலி

இந்தியா - பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி கட்டத்தில் அஸ்வின் சமயோஜிதமாக எடுத்த முடிவு குறித்து விராட் கோலி புகழ்ந்து பேசியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 25, 2022, 07:01 PM IST
  • இந்தியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
  • விராட் கோலி அதிகபட்சமாக 82 ரன்களை எடுத்தார்.
  • அஸ்வின் வின்னிங் ஷாட் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
IND vs PAK : அவரு எங்கையோ போய்ட்டாருங்க... அஸ்வினை கொண்டாடி தீர்த்த கோலி title=

டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில், நேற்று முன்தினம் (அக். 23) இந்தியா - பாகிஸ்தான் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. அப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

குறிப்பாக, கடைசி ஓவரின் கடைசி பந்து வரை இரு அணிகளுக்கும் பதற்றம் நிலவியது. 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது நவாஸ் வீச விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் களத்தில் இருந்தனர். 

முதல் பந்தில் பாண்டியா அவுட்டாக நான்காவது பந்தில் மட்டும் மொத்தம் 10 ரன்கள் எடுக்கப்பட்டது (நோ பாலில் சிக்ஸ், ஒரு வைட், 3 ரன்கள் பைஸ்). பின்னர், 5ஆவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். 

மேலும் படிக்க | Chase Master of Cricket : தீபாவளி பரிசு கொடுத்த 'கிங்' கோலி - தோளில் தூக்கி கொண்டாடிய ரோஹித்!

இதனால், 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட களத்திற்கு அஸ்வின் வந்தார். தினேஷ் கார்த்திக் அவுட்டான பந்தே லெக்-ஸ்ட்ம்பிற்கு வெளியே தான் சென்றது, ஆனால், தினேஷ் கார்த்திக் அடிக்க முற்பட பந்து காலில் பட்டு கீப்பரிடம் சென்றது.

இதை அஸ்வின் கவனித்துள்ளார். அரோண்ட் தி விக்கெட் முறையில் இடதுகை பந்துவீச்சாளரான முகமது நவாஸ், வலதுகை பேட்டர் அஸ்வினுக்கு லெக் திசையில் போட்டார். அப்போது, அஸ்வின் லெக் ஸ்ட்ம்பை சரியாக மறைத்து நின்று வைடை பெற்றுக்கொண்டார். இதனால், 1 பந்தில் 1 ரன் என்ற நிலை ஏற்பட்டு இந்திய அணியின் மீதான அழுத்தம் அடியோடு போனது. கடைசி பந்தையும் லாங் திசையில் பீல்டர் தலைக்கு மேல் அடித்து எளிதாக ரன்னை எடுத்தார், அஸ்வின். 

விராட் கோலி 82 ரன்கள் எடுத்திருந்தாலும், அஸ்வினின் இந்த சமயோஜிதமான முடிவுதான் இறுதியில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுதந்தது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் என்ற அழுத்தம் நிறைந்த போட்டியில், 1 பந்தில் 2 ரன்கள் என்ற பரபரப்பான நிலைமையில், மிகப்பொறுமையாக அந்த சுழலை அஸ்வின் அணுகிய விதம் பலராலும் பாராட்டப்பட்டது. 

இந்நிலையில், விராட் கோலியும், அஸ்வினுக்கு தனது புகழ் மாலையை சூட்டியுள்ளார். இதுகுறித்து விராட் கோலி கூறுகையில்,"நான் அஸ்வினிடம் பந்தை கவர் திசைக்கு மேல் தூக்கி அடிக்க கூறினேன். ஆனால், அவர் தனது மூளையை எக்ஸ்டாராவாக பயன்படுத்தினார். அது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு. லைனில் உள்ளே வந்த அந்த பந்து, வைடாக மாறியது" என்றார். 

விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். அந்த இன்னிங்ஸை வாழ்நாளின் தனது சிறந்த ஆட்டமாக கருதுவதாக அவர் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.  

மேலும் படிக்க | IND vs PAK: கடுப்பில் திட்டிய பாண்டியா... அப்செட் ஆன ரோகித் - என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News