7+18... தல தோனி குறித்து விராட் கோலி நிகழ்ச்சி

தோனியுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் எப்போதும் சிறந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 26, 2022, 02:31 PM IST
  • ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது
  • விராட் கோலி அணிக்கு திரும்பியிருக்கிறார்
  • தோனி குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் கோலி
7+18... தல தோனி குறித்து விராட் கோலி நிகழ்ச்சி title=

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள இந்தத் தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது. நெகிழ்ச்சியுடன் அவர் எழுதியிருக்கும் பதிவில், “தோனியுடன் துணைக்கேப்டனாக பணியாற்றிய காலங்கள்தான் எனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் ஆகும். தோனியும் நானும் அமைத்த பார்ட்னர்ஷிப்கள்தான் என்றுமே எனக்கு மிக சிறப்பான ஒன்று. 7 + 18” என இருவரின் ஜெர்ஸி நம்பர்களையும் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

தோனியும், விராட் கோலியும் அமைத்த பார்ட்னர் ஷிப்கள் மூலம் இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஃபார்ம் அவுட்டில் சிக்கியிருக்கிறார். சச்சினின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என உலகம் முழுவதும் பேச்சு எழுந்தது. 

Virat Kohli

ஆனால், அவர் கடைசியாக சதம் அடித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. சமீபத்தில் நடந்த ஐபிஎல்லில்கூட விராட் கோலியால் ஃபார்முக்கு திரும்ப முடியவில்லை. இதனால் அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவருக்கு உள்நாட்டு வீரர்கள் முதல் பிறநாட்டு வீரர்கள்வரை தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் படிக்க | ’இந்த முறை ஆட்டத்தில் பொறி பறக்கும்’ பாகிஸ்தானை எச்சரித்த ரோகித் சர்மா

நிலைமை இப்படி இருக்க ஆசிய கோப்பையில் விராட் கோலி அணிக்கு திரும்பியிருக்கிறார். இந்த தொடரில் விராட் கோலி நிச்சயம் ஃபார்ம் அவுட்டிலிருந்து மீண்டு கிங் கோலியாக மீண்டும் வலம் வருவார் என அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News