இன்ஸ்டாகிராமில் கோடிகளை அள்ளும் விராட் கோலி; முன்னணி பிரபலங்களை பின்னுக்கு தள்ளினார்

2021 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி 3ம் இடத்தை பிடித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 16, 2022, 08:02 AM IST
  • விராட் கோலி இன்ஸ்டாகிராம் வருமானம்
  • 2021 ஆம் ஆண்டில் உலகில் 3வது இடம்
  • ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் உள்ளார்
இன்ஸ்டாகிராமில் கோடிகளை அள்ளும் விராட் கோலி; முன்னணி பிரபலங்களை பின்னுக்கு தள்ளினார் title=

உலகம் முழுவதும் இருக்கும் பிரபலங்களில் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் கால்பந்து உலகில் ஜாம்பவனாக இருக்கும் கிறிஸ்யானோ ரொனால்டோ முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இன்ஸ்டாகிராம் மூலம் மட்டும் 85 மில்லியன் அமெரிக்கன் டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி அந்த லிஸ்டில் 3வது இடத்தில் இருக்கிறார். 

விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறை பிரபலங்களுக்கு திரும்பிய திசையெல்லாம் பண மழை தான். அவர்கள் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு கோடி கணக்கில் வருமானத்தை பெறுகிறார்கள். அவர்கள் நடித்தால் போதும், கோடிகளை கொட்டுவதற்கு பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. பணத்தை வாரி இறைக்க தயாராக இருக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் தங்களுக்கு நம்பகமாக தெரியும் விளம்பரங்களில் மட்டுமே பிரபலங்கள் நடிக்க ஒப்புக் கொள்கின்றனர். ஏனென்றால் பின்னாளில் பிரச்சனை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்

மேலும் படிக்க | 'விராட் கோலியை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்' - டிரெண்டிங்கால் கொந்தளித்த ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

ஹாப்பர் ஹெச்குயூ பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதித்த தொகை குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 36 இன்ஸ்டாகிராம் பதிவுகளில் இருந்து விளம்பர வருமானமாக சுமார் 85.2 மில்லியன் அமெரிக்கன் டாலரை சம்பாதித்துள்ளதாக கூறியுள்ளது. இந்த லிஸ்டில் இவர் தான் உலகிலேயே முதல் இடம். இவருக்கு போட்டியாளராக இருக்கும் மெஸ்ஸி 72 மில்லியன் அமெரிக்கன் டாலரை சம்பாதித்து இருக்கிறார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இருக்கிறார். ஸ்பான்சர் மற்றும் விளம்பரங்கள் மூலம் 36.7 மில்லியன் அமெரிக்கன் டாலர்களை சம்பாதித்துள்ளார். 

டாப் 10 லிஸ்டில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் இவர்கள் மூன்று பேர் மட்டுமே. இவர்களுக்கு அடுத்த இடத்தில் எலன் டிஜெனெரஸ், பியோனஸ், கெவின் ஹார்ட் மற்றும் டுவா லிபா போன்ற பிரபலங்கள் உள்ளனர். டிஜெனெரஸ் மற்றும் பியோனஸ் ஆகியோர் அமெரிக்காவில் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களாக இருக்கின்றனர்.

மேலும் படிக்க | இந்தியாவில் வருகிறது டி10 லீக்... 'டிசம்பர் எப்போது வரும்' - வெயிட்டிங்கில் வெறியேற்றும் கிறிஸ் கெயில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News