புதுடெல்லி: இந்த நாட்களில் உலகம் முழுவதும் கிரிக்கெட்டில் முடங்கிக் கிடக்கிறது. இதற்கு இடையிலும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பாடல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண்கள் ஹாக்கி அணியின் அனைத்து வீரர்களும் புதிய ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பாடுவதைக் காணலாம்.
இந்த வீடியோ முதலில் இந்தியா ஹாக்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பகிரப்பட்டது. இந்த வீடியோ இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது.
வீடியோவைப் பாருங்கள் ...
Humne kaha hai jo, tum bhi kaho! #IndiaKaGame #FIHSeriesFinals #RoadToTokyo @IndiaSports @Media_SAI @CMO_Odisha @sports_odisha @FIH_Hockey pic.twitter.com/fgeNn34iZ4
— Hockey India (@TheHockeyIndia) June 23, 2019
முன்னதாக, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) சார்பில் பெண்களுக்கான சீரிஸ் பைனல்ஸ் தொடர் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி பேட்டியில் இந்திய அணியும், ஜப்பான் அணியும் மோதின.
ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கேப்டன் ராணி ராம்பால் முதல் கோல் அடித்தார். இதற்கு, 11-வது நிமிடத்தில் ஜப்பானின் கனான் மோரி, ஒரு 'பீல்டு' கோலடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவில், போட்டி 1-1 என சமநிலை பெற்றது. பின்னர் போட்டியின் 45-வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோலடித்த இந்தியாவின் குர்ஜித் கவுர், 60-வது நிமிடத்தில் 'பெனால்டி கார்னர்' மூலம் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த தொடரின் இறுதி போட்டியில் நுழைந்த இருஅணிகளும் வரும் 2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றன.