கிரிக்கெட்டில் நடுவர் பணி என்பது உண்மையில் ஒரு சவாலான பணியாகும். ஏனெனில் களத்தில் உள்ள வீரர்கள் விக்கெட் குறித்து கேட்கும் போது முடிவுகளை சில நொடிகளில் எடுக்க வேண்டும். ஒரு தவறான முடிவு மொத்த ஆட்டத்தையும் மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. LBW மற்றும் கேட்ச்களில் முடிவுகளை முழுமையான துல்லியத்துடன் வழங்கப்பட வேண்டும். பீல்டிங் பக்கத்தின் முறையீட்டால் ஏற்படும் அழுத்தத்தை நடுவர்களும் சமாளிக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
ALSO READ | மைதானத்தில் சறுக்கி விளையாடிய பங்களாதேஷ் வீரர்! வைரல் வீடியோ!
நடுவர்கள் பொதுவாக தவறான முடிவுகளை எடுக்கும்போது பட்சத்தில் வீரர்கள் மூன்றாம் நடுவர்களை அணுகுவது வழக்கம். குறிப்பிடத்தக்க வகையில், சில நடுவர் தனக்கே உரிய உடல் மொழிகளுடன் தனது முடிவை அறிவிப்பார்கள். சிக்ஸர்க்கு இரண்டு கைகளை உயர்த்துவது, அவுட் என்றால் ஒரு விரலை தூக்கி காட்டுவது போன்றது நடுவர்களின் பொதுவான வேலை.
இந்த நடவடிக்கைகள் மிகவும் எளிமையானவை என்றாலும், சில நடுவர்கள் தங்கள் முடிவுகளை தெரிவிக்க வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளனர். நடுவர் பில்லி பவுடன் எப்படி முடிவுகளை அறிவிப்பார் என்பதை யாராலும் மறக்க முடியாது. தற்போது ஒரு நடுவரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
A different style of umpiring #Cricket pic.twitter.com/PZdbB2SUIY
— Saj Sadiq (@SajSadiqCricket) December 5, 2021
மகாராஷ்டிராவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான புரந்தர் பிரீமியர் லீக்கில் இருந்து நடுவரின் வித்தியாசமான செயல் வைரல் ஆகி வருகிறது. நடுவர்கள் பொதுவாக வைடு-ஐ அறிவிக்க தங்கள் கைகளை நீட்டி அறிவிப்பர். ஆனால் இந்த நடுவர் தலைகீழாக நின்று தனது கால்களை பயன்படுத்தினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ALSO READ 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR