U-19 WC Final: சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!!

கல்ரா அபார சதம்: ஜூனியர் உலகக் கோப்பையை வென்றது இந்தியா

Last Updated : Feb 3, 2018, 01:46 PM IST
U-19 WC Final: சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!! title=

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதன் இறுதி போட்டி அங்குள்ள மவுன்ட் மவுங்குனியில் இன்று நடந்து வருகிறது. 

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்குத் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜேசன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மெர்லோ 76 ரன்கள் எடுத்தார். அந்த அணி, 47.2 ஓவரில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து 4 வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. U-19 உலகக்கோப்பையில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனை. 

ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக கொண்ட இந்திய ஜூனியர் அணி உலகக்கோப்பையில் அசத்தல் வெற்றி. 

Trending News