சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3வது லீக் போட்டிகள் நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக் போட்டி கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த லீக் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் தற்போது இந்தாண்டுக்கான தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று 7வது லீக் (TNPL 2021) போட்டி நடைபெற்றது. இதில், திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின.
ALSO READ | TNPL 2021: நெல்லை vs திருச்சி; முதல் வெற்றியை பதிவு செய்தது திருச்சி அணி
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் பெராரியோ 40 ரன்கள் எடுத்தார். அபிஷேக் 38 ரன்களும் எடுத்தார். இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்கியது.
இதில் கேப்டன் பிரான்சிஸ் அரை சதமடித்து 58 ரன்னில் வெளியேறினார். இறுதியில், திருப்பூர் அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேலம் அணி சார்பில் பெரியசாமி, முருகன் அஷ்வின், பிரனேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ALSO READ | MS Dhoni-யால் இந்த 5 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR