TNPL 2021: 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல்

திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 28, 2021, 06:14 AM IST
TNPL 2021: 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல் title=

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக் போட்டி கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த லீக் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் தற்போது இந்தாண்டுக்கான தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் (TNPL 2021) திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons) மற்றும் திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors)  அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

ALSO READ | TNPL 2021: போட்டி அட்டவணை, பங்கேற்கும் அணிகள், நேரம், நேரடி ஒளிபரப்பு -விவரங்கள்

முதலில் பேட் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது இருந்தது. இதில் நிதிஷ் ராஜகோபால் 45 ரன்னும், மொகமது கான் 26 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. 

அதன்படி தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் நிதாமாகவும் பொருப்புடனும் விளையாடிய மோகித் ஹரிஹரன் 41 ரன்னும், சுவாமிநாதன் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ALSO READ | TNPL கிரிக்கெட் 2021: நெல்லையை வென்றது திருப்பூர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News