சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3வது லீக் போட்டிகள் நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக் போட்டி கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த லீக் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் தற்போது இந்தாண்டுக்கான தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி 3 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் நேற்று 4வது லீக் (TNPL 2021) போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி, மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 96 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக கீப்பர் மணி பாரதி 26 ரன்கள் சேர்த்தார். ஹரி நிஷாந்த் 19 ரன்களும், விவேக் 11 ரன்களும் அடித்தனர்.
ALSO READ | TNPL 2021: நெல்லை vs திருச்சி; முதல் வெற்றியை பதிவு செய்தது திருச்சி அணி
அடுத்து விளையாடிய மதுரை அணி 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. இதில் முதலில் துவக்க வீரர் அருண் கார்த்திக் 22 ரன்கள் சேர்த்தார். பின்னர் ராஜ்குமார் 3 சேர்த்தார், அனிருத் சீதாராம் (4) ஆகியோர் விரைவில் விக்கெட்டை இழந்தனர், பின்னர் ஜெகதீசன் கவுசிக் ஆடி 31 ரன்கள் சேர்த்தார்.
நாடி அவுட் ஆகாமல் இருந்த சதுர்வேத் 18 ரன்களும், ஷாஜகான் 11 ரன்களும் எடுத்ததில், மதுரை அணி 30 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதன்படி 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி அசால்டாக வெற்றி பெற்றது.
ALSO READ | MS Dhoni-யால் இந்த 5 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR