முடிவுக்கு வரும் 2 வீரர்களின் இந்திய அணி வாய்ப்பு - பிசிசிஐ அதிரடி முடிவு

இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத இரண்டு இளம் வீரர்களின் இந்திய அணி வாய்ப்பு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 17, 2022, 10:19 AM IST
  • மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கேள்விக்குறி
  • பிரித்திவி ஷா தொடர்ந்து ஓரங்கட்டப்படுகிறார்
  • மீண்டும் வாய்ப்பு கொடுக்குமா பிசிசிஐ?
முடிவுக்கு வரும் 2 வீரர்களின் இந்திய அணி வாய்ப்பு - பிசிசிஐ அதிரடி முடிவு  title=

இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்பது கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொருவரின் கனவு. அந்த கனவை அடைய அவர்கள் நாள்தோறும் விடாமுயற்சியுடன் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால், 11 பேர் கொண்ட அணிக்கு பல வீரர்கள் போட்டிபோட வேண்டிய சூழல் இருக்கிறது. ஒரு சிலருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அதனை தக்க வைத்துக் கொள்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அப்படி வாய்ப்பு கிடைத்தும் 2 வீரர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளாததால், அவர்களின் இந்திய அணி வாய்ப்பு இனி சாத்தியமற்றதாக மாறிவிட்டது.   

மேலும் படிக்க | மும்பையில் தெருவில் கிரிக்கெட் விளையாடிய ரோகித்சர்மா - வைரல் வீடியோ

1. பிரித்வி ஷா

இளம் வீரரான பிருத்திவி ஷாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. 3 வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். சச்சின் மற்றும் சேவாக்கின் ஷாட்டுகளை இவரின் பேட்டிங்கில் பார்க்க முடியும். சச்சின் மற்றும் ரவிசாஸ்திரியின் பாராட்டுகளைப் பெற்ற இவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் அவருக்கான வாய்ப்புகளை கொடுக்க பிசிசிஐ மறுத்து வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 339 ரன்கள் குவித்துள்ளார். 6 ஒருநாள் போட்டிகளில் 189 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதால், அவரின் இந்திய அணியின் வாய்ப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை என தெரிகிறது. 

2. மணீஷ் பாண்டே

இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது முழுவதும் இழந்துவிட்டவர் என்று கூற மணீஷ் பாண்டேவைக் கூறலாம். இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத அவர், ஐபிஎல் போட்டிகளிலும் பெரிய அளவு சோபிக்கவில்லை. தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் இந்திய அணிக்கான வாய்ப்பு  என்பது இவருக்கு துளியும் வாய்ப்புகள் இல்லை. இந்தியாவுக்காக 39 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 44.31 சராசரி மற்றும் 126.15 ஸ்ட்ரைக் ரேட்டில் 709 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் எதிர்காலமாக இருப்பார் என ஒருகாலத்தில் பார்க்கப்பட்டவர். ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை பதிவு செய்தவரும் இவர் தான். 

மேலும் படிக்க | அவசரமாக ஜெர்மனி செல்லும் கே.எல்.ராகுல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News