ஐ.பி.எல் 2022 தொடர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. ஏற்கனவே 8 அணிகள் இருக்கும் நிலையில் அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் புதியதாக களமிறங்க உள்ளன. பஞ்சாப் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் லக்னோ அணிக்கும், ஹர்திக் பாண்டியா அகமதாபாத் அணிக்கும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ | IPL Mega Auction 2022: பண மழையில் குளிர்காயும் பாண்டியா-ராகுல்
அடுத்தமாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஐ.பி.எல் ஏலம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர் ஆவேஸ் கான், தமிழக வீரர் ஷாரூக்கான் உள்ளிட்டோருக்கு பம்பர் பரிசு அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், ரவி அஸ்வின், வார்னர் உள்ளிட்ட மிகப்பெரிய ஸ்டார் பிளேயர்களும் ஏலத்தில் பங்கேற்க இருப்பதால், யார்? எந்த அணிக்கு செல்வார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல்லில் ஜொலித்த முக்கியமான சில வீரர்கள் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் விளையாடவில்லை
ALSO READ | ALSO READ | க்ருணால் பாண்டியா இந்த ஐபிஎல்லின் Sixer King ஆவாரா?
ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் பெயர்கள் ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் இல்லை. இங்கிலாந்து அணியின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை கொண்டு இருவரும் ஐ.பி.எல் விளையாடவில்லை எனக் கூறப்படுகிறது. ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் பெயரும் இதுவரை ஏலப் பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல், ஐ.பி.எல்லுக்கு மீண்டும் திரும்புவது குறித்து யோசிப்பதாக கூறிய மிட்சல் ஸ்டார்க் ஏலத்தில் பங்கேற்கவில்லை.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் ஐ.பி.எலில் பங்கேற்க விரும்பம் தெரிவித்திருந்த நிலையில் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். சென்னை அணியின் ’குழந்தை’ என அழைக்கப்படும் சாம் கரண் காயம் காரணமாக இந்த ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவது சந்தேகம். அவருடைய சகோதரரான டாம் கரனும் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க வில்லை என அறிவித்துள்ளார். கெயில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விளையாடாதது ரசிகர்கள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR