விராட் கோலி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நேற்று வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு சென்றது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்ற பிறகு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.
ஜூலை 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாவது டெஸ்ட் செயிண்ட்லூசியாவில் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை வரையும், நான்காவது டெஸ்ட் டிரினிடாட்டில் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை வரையும் நடைபெறுகிறது.
கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்த போது 1-0 என்ற கணக்கில் தொடரை வென்று இருந்தது.
இந்திய வீரர்கள் விவரம் வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), ரகானே, முரளி விஜய், ஷிகர் தவான், கே.எல்.ராகுல், புஜாரா, ரோகித் சர்மா, ரிதிமான் சகா, அஷ்வின், அமித் மிஸ்ரா, ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகம்மது சமி, புவனேஷ்குமார், ஷார்துல் தாகூர், ஸ்டுவர்ட் பின்னி,
The journey begins. #TeamIndia leaves for the tour of West Indies. #WIvIND pic.twitter.com/ebK1jkoFiN
— BCCI (@BCCI) July 5, 2016