இந்திய அணிக்கு விராட் கோலி தேவை- ரோஹித் சர்மா!

ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலி இந்திய அணிக்கு எப்போதுமே தேவைப்படுவார் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Dec 10, 2021, 10:08 AM IST
  • தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்துள்ளது பிசிசிஐ.
  • விராட் கோலியை போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேனை ஒரு அணியிலிருந்து புறக்கணிக்க முடியாது என்று ரோஹித் சர்மா கூறினார்.
இந்திய அணிக்கு விராட் கோலி தேவை- ரோஹித் சர்மா!  title=

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக ரோகித்சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.  விராட் கோலிக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்துள்ளது பிசிசிஐ.  டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி தொடர்ந்து செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.   உலக கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது ஒரு நாள் போட்டிகள் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை பிசிசிஐ தாமாக நீக்கியுள்ளது. 

ALSO READ | டெஸ்ட்க்கு கோலி, ODIக்கு ரோஹித் - இந்திய அணி அறிவிப்பு!

ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலி இந்திய அணிக்கு எப்போதுமே தேவைப்படுவார்.  டி20 போட்டிகளில் 50+ ஆவரேஜ் வைத்துள்ளவர் கோலி எதிர் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.  பல அசாதாரண சூழ்நிலைகளில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதில் முக்கிய பங்கு வகித்துள்ளார் விராட் கோலி.  கேப்டன் பொறுப்பில் இல்லை என்றாலும் இன்னமும் அவர் இந்திய அணியின் தலைவரே.  அவரின் பேட்டிங் திறமையை அடித்துக்கொள்ள வேறு ஆள் கிடையாது.  விராட் கோலியை போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேனை ஒரு அணியிலிருந்து புறக்கணிக்க முடியாது என்று ரோஹித் சர்மா கூறினார். 

rohit

டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக விராட் கோலி இருந்து வந்தார்.  95 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 65 முறை இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்.  அவ்வப்போது இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மா பல ஆட்டங்களை வென்றுள்ளார்.  சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் கேப்டனாக இருந்து 3-0 என்ற கணக்கில் கோப்பையை வென்றார்.  மேலும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்து ஐந்து கோப்பையை வென்றுள்ளார்.  2017 ஆம் ஆண்டு தோனியின் ஓய்விற்குப் பிறகு கேப்டனாக பொறுப்பேற்ற கோலி பல கோப்பைகளை இந்திய அணிக்கு வென்று கொடுத்திருந்தாலும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாதது ஒரு கரும்புள்ளியாக உள்ளது.

ALSO READ | ஒருநாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விரைவில் ஓய்வு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News