இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு 18 பேர் கொண்ட அணியினை அறிவித்தது BCCI!

Last Updated : Jul 18, 2018, 03:29 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு! title=

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு 18 பேர் கொண்ட அணியினை அறிவித்தது BCCI!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முன்னதாக டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது. இதனையடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று இந்தியாவினை பழிதீர்த்துக் கொண்டது.

இந்நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் முதல் 3 பேட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியை இன்று BCCI அறிவித்துள்ளது.

இந்தபட்டியலின் படி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்... விராட் கோலி, ஷிகர் தவான், ராகுல், M விஜய், புஜாரா, ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பந்த், அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டயா, இஷாந்த் ஷர்மா, மொஹமத் ஷமி, உமேஷ் யாதவ், பூமராக், சர்தூல் தாகூர். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில் இருந்து மூத்த வீரர் ரோகித் ஷர்மாவுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அதேப்போல் இளம் வீரர் ரிஷாப் பந்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

Trending News