தகுதிச் சுற்று மூலம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தேர்வான நேபாளம் கிரிக்கெட் அணி, நடப்பு உலக கோப்பை தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை என்றாலும் சூப்பராகவே விளையாடி வருகிறது. அந்த அணி வெற்றிக்கு அருகாமையில் வந்து தோற்றுப்போகிறது. குறிப்பாக, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை லீக் போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி பந்தில் ரன் அவுட் மட்டும் ஆகவில்லை என்றால், சூப்பர் ஓவர் போட்டியாக இந்த போட்டி மாறியிருக்கும். ஏன், கடைசி ஓவர் வரை வெற்றியின் விளிம்பில் தான் நேபாளம் இருந்தது. கொஞ்சம் பொறுப்பாக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஆடியிருந்தால் எளிதாகவே வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் கடைசி கட்ட வீரர்கள் அவசரப்பட்டதால், தோல்வியை தழுவ நேரிட்டது.
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: அதிக பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 6 அணிகள்!
தென்னாப்பிரிக்கா - நேபாளம் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கிங்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஹென்றிக்ஸ் 43 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் விளையாடாமல் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். நேபாளம் அணியில் குஷல் ப்ரூட்டல் மட்டும் 4 விக்கெட்டுகளும், திபேந்தர் சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய நேபாளம் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அசிப் ஷேக் 42 ரன்கள் விளாச, அனில் ஷா 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்துவிட்டது நேபாளம் அணி. எஞ்சிய 18 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுக்க, கடைசியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென்னாப்பிரிக்க அணியில் ஷம்சி சூப்பராக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் குரூப் டி பிரிவில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்க சூப்பர் 8 சுற்று போட்டிகளுக்கும் தகுதி பெற்றது.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு அரையிறுதி டிக்கெட் கன்பார்ம்... ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ