டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் குருபாஸ் 56 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான இப்ராஹிம் சத்ரான் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த அஸ்மத்துல்லா 22 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இருப்பினும் கடினமான பிட்ச் என்பதால் ஆப்கானிஸ்தான் எடுத்த 159 ரன்கள் நியூசிலாந்து அணிக்கு சவாலான ஸ்கோராகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க | தோனி ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக முடியும் - மேத்யூ ஹைடன்!
இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடியபோது, நியூசிலாந்து அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. குறிப்பாக, குருபாஸ், இப்ராஹிம் சத்ரான் கொடுத்த பல வாய்ப்புகளை வீண்டித்தனர். மூன்று கேட்சுகள், ஒரு ஸ்டம்பிங், ஒரு ரன்அவுட் வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்டனர். இதுதான் ஆப்கானிஸ்தான் வலுவான ஸ்கோரை நோக்கி செல்ல முக்கிய அடித்தளமாக அமைந்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியின் துல்லியமான பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் சீட்டுக்கட்டுகள் போல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டது. ஆரம்பத்திலேயே ரன் கணக்கை தொடங்காமல் பின் ஆலன் விக்கெட்டை விட்ட நியூசிலாந்து அணியால் கடைசி வரை நிமிரவே முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டு, வெறும் 75 ரன்களுக்கு சுருண்டது.
இதனால் நியூசிலாந்து அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் டி20 உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. நியூசிலாந்து அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்தளவுக்கு ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 15.2 ஓவர்கள் மட்டுமே விளையாடியது நியூசிலாந்து அணி. ஆப்கானிஸ்தான் அணியில் கேப்டன் ரஷித் கான், ஃபரூக்கி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது நபி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் படிக்க | USA vs PAK: வரலாற்று சாதனை! பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் தோற்கடித்த USA!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ