பூரனின் அதிரடியில் முதல் தோல்வியை சந்தித்த குஜராத்!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

Written by - RK Spark | Last Updated : Apr 11, 2022, 11:33 PM IST
  • சன்ரைசர்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதின.
  • இதுவரை குஜராத் அணி தோல்வியை சந்திக்கவில்லை.
  • கடந்த போட்டியில் சென்னை அணியை வென்றது சன்ரைசர்ஸ்.
பூரனின் அதிரடியில் முதல் தோல்வியை சந்தித்த குஜராத்! title=

ஐபிஎல் 2022-ன் 21வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காத குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெற வேண்டி களத்தில் இறங்கியது சன்ரைசர்ஸ் அணி. கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இருந்தது சன்ரைசர்ஸ். டாஸ் வென்ற சன்ரைஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார்.

 

மேலும் படிக்க | CSKவுக்கு ஜடேஜாவைக் கேப்டனாக்குனதுதான் தப்பாம்!- சொன்னது யார் தெரியுமா!?

வழக்கமாக குஜராத் அணியில் அதிரடி காட்டக்கூடிய சுப்மன் கில் 7 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விக்கெட் கீப்பர் வேட் மற்றும் சாய் சுதர்சன் 19 மற்றும் 11 ரன்களுக்கு முறையே வெளியேறினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மில்லரும் 12 ரன்களுக்கு அவுட்டானார். கேப்டன்சி பொறுப்புடன் விளையாடிய ஹர்திக் பாண்டியா 42 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அபினவ் மனோகர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் அடித்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் புவனேஸ்வர் மற்றும் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

அடிக்கக்கூடிய இலக்கை விரட்டிய சன்ரைஸ் அணிக்கு ஓபனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. அபிஷேக் சர்மா 42 ரன்களும், கேன் வில்லியம்சன் 57 ரன்களும் அடித்து நல்ல துவக்கத்தை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் திருப்பதி காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். பிறகு களமிறங்கிய நிக்கோலஸ் பூரனின் அதிரடியில் தோற்கடிக்கவே முடியாத குஜராத்தை தோற்கடிக்க செய்தது. 18 பந்துகளில் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உட்பட 34 ரன்களை விளாசினார். நிக்கோலஸ் பூரன் அதிரடியில் 19.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 168 ரன்கள் அடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் அணி. இதன்மூலம் சன்ரைசர்ஸ் நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியுற்று உள்ளது.

 

மேலும் படிக்க | தோனி செய்த அந்த மறக்க முடியாத விசயம்! நினைவிருக்கிறதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News