ரிஷப் பந்தா? தினேஷ் கார்த்திகா? உலகக் கோப்பை XI-ல் யாருக்கு வாய்ப்பு?

Ind vs Aus: பந்த் மற்றும் கார்த்திக் இருவரும் அணியில் இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Sep 24, 2022, 11:48 AM IST
  • 2வது டி20 போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி.
  • ரோஹித் சிஸ்சர் மழைகளை பொழிந்து வெற்றி பெற செய்தார்.
  • தினேஷ் கார்த்திக் இரண்டு பந்துகளில் 10 ரன் அடித்து கலக்கல்.
ரிஷப் பந்தா? தினேஷ் கார்த்திகா? உலகக் கோப்பை XI-ல் யாருக்கு வாய்ப்பு? title=

கடந்த ஒரு மாதமாக, டி20 உலகக் கோப்பையில் லெவன் அணியில் யார் விளையாடுவது என்பது குறித்தும்,  தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதம் இன்னும் முடியாத நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். கவாஸ்கரின் கூற்றுப்படி, பந்த் மற்றும் கார்த்திக் இருவரும் லெவன் அணியில் இடம்பிடிக்க வேண்டும். ஹர்திக்கிற்கு முன்னால் அல்லது நம்பர் 6ல் பந்த் விளையாடுது சிறந்தது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | 8 ஓவர் அதிரடி போட்டி! இந்தியா அசத்தல் வெற்றி!

“இருவரும் அணியில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். 5வது இடத்தில் ஹர்திக், 6வது இடத்தில் பந்த் மற்றும் 7வது இடத்தில் கார்த்திக்கை முயற்சிக்கலாம்" என்று கவாஸ்கர் கூறினார். நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது, ​​பந்த் மற்றும் கார்த்திக் இருவரும் அணியில் இடம் பெற்றனர்.  ஆனால் கார்த்திக் பந்திற்கு முன்னால் இறக்கப்பட்டார்.  கார்த்திக் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்து, 4 பந்துகள் மீதம் இருந்த நிலையில் அணியை வெற்றி பெற செய்தார்.  

DK

நாக்பூரில் 2வது டி20 போட்டியின் போது ரிஷப் பந்தை விட தினேஷ் கார்த்திக் ஏன் முன்னாள் களமிறங்கினார் என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “தினேஷ் கார்த்தி ஆட்டத்தை முடிந்ததில் மகிழ்ச்சி. ரிஷப்பை முன்னாள் இறக்கலாமா? வேண்டுமா என்று நினைத்தேன், ஆனால் சாம்ஸ் ஆஃப் கட்டர்களை பந்துவீசப் போகிறார் என்று நினைத்தேன், அதனால் டிகே உள்ளே வரட்டும் என்று நினைத்தேன், அவர் அணிக்காக எந்த இடத்திலும் ஆட கூடிய வீரர்”என்று ரோஹித் கூறினார்.

மேலும் படிக்க | கெயில் கூட இல்லை.. டி20 போட்டிகளில் அதிக சிஸ்சர் அடித்த வீரர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News