மும்பை இந்த தடவை Playoffக்குப் போகுமா, போகாதா?! - எதுதான் உண்மை?

மும்பை தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில் அவ்வணி ப்ளே ஆஃப் செல்லுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 1, 2022, 05:11 PM IST
  • மும்பை தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோல்வி
  • ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை முதல் வெற்றி
  • மும்பைக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறதா இல்லையா?!
மும்பை இந்த தடவை Playoffக்குப் போகுமா, போகாதா?! - எதுதான் உண்மை? title=

ஐ.பி.எல்லின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்புத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோற்ற மும்பை, முதல் வெற்றியைப் பெற்றுள்ளதால் தற்போது சற்று ஆசுவாசமடைந்துள்ளது.

வழக்கமாக எதிரணிகளைக் கலங்கடித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ப்ளே ஆஃப்  செல்லும் மும்பை அணி இம்முறை சொதப்பியதால் புள்ளிப் பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் இருந்துவருகிறது. இதனிடையே முதல் வெற்றியைப் பெற்றுள்ளதால் மும்பைக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா அல்லது அதிலிருந்து முழுவதுமாக வெளியேறிவிட்டதா எனும் கேள்வி இருந்துவருகிறது.

ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பொறுத்தவரை 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள குஜராத் எந்தச் சிக்கலும் இன்றி ப்ளே ஆஃப் செல்லும். மற்ற அணிகளைப் பொறுத்தவரை குறைந்தது 14 புள்ளிகளையாவது பெற்றாகவேண்டும். அத்துடன் நெட் ரன் ரேட்டிலும் அதிக புள்ளிகளைப் பெற்றிருக்கவேண்டும். அதில் எந்தெந்த அணிகள் முன்னணி இடங்களைப் பெறுகின்றனவோ அவையே ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.

மும்பையைப் பொறுத்தவரை 2 புள்ளிகள்தான் தற்போது பெற்றுள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் வென்றாலும் அவ்வணியால் 12 புள்ளிகள்தான் பெறமுடியும். அத்துடன் நெட் ரன் ரேட்டிலும் மும்பை அதள பாதாளத்தில் உள்ளதால் மும்பை அணி ப்ளே ஆஃப் செல்ல கிட்டத்தட்ட அனைத்து கதவுகளும் அடைபட்டுவிட்டன என்றே கூறலாம்.

மேலும் படிக்க | ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவைப் பற்றித் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்! - HBD-Rohit-Sharma

ஆம், ப்ளே ஆஃப்புக்கு நேரடியாகச் செல்லும் வாய்ப்பை மும்பை இழந்துவிட்டது. ஆனால் மற்ற வழிகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. ஆம், கணித விதிப்படி பார்த்தால் மும்பை அணி ப்ளே ஆஃப்பை விட்டு மொத்தமாகவே வெளியேறிவிட்டது எனக் கூறவும் முடியாது. முதலில் அடுத்து நடக்கவுள்ள தனது அனைத்து போட்டிகளிலும் மும்பை வென்றாகவேண்டும். அதிலும் பிரமாண்டமான வெற்றியை அவ்வணி பதிவு செய்யவேண்டும்.

அதன்பிறகு மற்ற அணிகளின் வெற்றி தோல்விதான் மும்பையின் ப்ளே ஆஃபைத் தீர்மானிக்கும். ஒருவேளை மழை உள்ளிட்ட காரணங்களால் மற்ற அணிகளின் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுப் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும் பட்சத்திலும் மும்பைக்கு சில சாதகமான வாய்ப்புகள் உருவாகக்கூடும்.

மேலும் படிக்க | சச்சின் பற்றி இதுவரை தெரியாத 10 சுவாரஸ்யத் தகவல்கள்! #HBDSachin

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News