IND vs SL: டி-20 போட்டி ஒத்திவைப்பு; க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) விளையாட திட்டமிடப்பட்டு இருந்த இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 27, 2021, 04:22 PM IST
  • க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி.
  • இரண்டாவது டி-20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை.
IND vs SL: டி-20 போட்டி ஒத்திவைப்பு; க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி! title=

கொழும்பு: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டி-20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொழும்பு மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) விளையாட திட்டமிடப்பட்டு இருந்த இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி (India Sri Lanka T20I Postponed) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்ட்யாவுக்கு (Krunal Pandya) கோவிட் -19 உறுதி ஆகியுள்ளதால், கொரோனா நெறிமுறைகளின்படி, வீரர்கள் ஒரு நாள் தனிமையில் இருப்பார்கள். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி-20 போட்டி புதன்கிழமைக்கு (ஜூலை 28) மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ | IND vs SL: மரியாதை தெரிந்த க்ருணால் பாண்ட்யா என புகழாரம்

கொரோனா விதியின்படி, க்ருனால் பாண்ட்யாவின் அருகாமையில் இருந்த 8 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் பிருத்வி ஷா (Prithvi Shaw) மற்றும் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) ஆவார்கள்.

ஒருவேளை பிருத்வி  ஷா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால்,  இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தவறவிடக்கூடும். ஏனென்றால் அடுத்த மாதம் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணியில் (Indian team) இருந்து சுப்மான் கில் (Shubman Gill), வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) மற்றும் அவேஷ் கான் (Avesh Khan) ஆகிய 3 வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி விட்டனர். இதனையடுத்து பிருத்வி ஷா (Prithvi Shaw) மற்றும் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்களை இங்கிலாந்துக்கு அனுப்ப கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக, இலங்கை அணியின் முகாமில் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | IND VS SL: 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News