ICC World Cup 2023, SA vs BAN: நடப்பு உலகக் கோப்பை தொடரில் 23ஆவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்றைய போட்டியிலும் டெம்பா பவுமா அணியில் இல்லை.
டி காக் 174...
தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் ஓப்பனர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 12 ரன்களிலும், வான் டர் டெசன் 1 ரன்னிலும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தார். ஆனால், மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் - எய்டன் மார்கரம் 130+ ரன்களை குவித்தனர். அதில் டி காக் சதம் அடித்து மிரட்டிய நிலையில், மார்க்ரம் மறுமுனையில் அரைசதம் அடித்தார். குறிப்பாக, இந்த தொடரில் 3 சதங்களை டி காக் அடித்து மிரட்டனார். அந்த நேரத்தில் மார்க்ரம் 60 ரன்களில் ஆட்டமிழக்க, கிளாசென் களம்புகுந்தார்.
கிளாசென் உடன் ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் மீண்டும் அதிரடியை தொடர்ந்தார். இந்த ஜோடி இரு முனையிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டது. இந்த ஜோடி சுமார் 15 ஓவர்களில் 142 ரன்களை குவித்தது. 200 ரன்களை நோக்கி வெறிகொண்டு அடித்துக்கொண்டிருந்த டி காக் 174 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 140 பந்துகளில் 15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை அடித்திருந்தார். அப்போதும் 5ஆவது விக்கெட்டுக்கு கிளாசென் - மில்லர் ஜோடி சேர்ந்து சிக்ஸர் மழையை பொழிந்தது.
கடைசியில் சிக்ஸர் மழை
கிளாசென் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் 2 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் 90 ரன்களை அடித்திருந்தார். மறுபுறம் மில்லரும் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியை பறக்கவிட 15 பந்துகளில் 34 ரன்களை குவித்தார். இதன்மூலம், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் 26 பவுண்டரிகளையும், 19 சிக்ஸர்களையும் தென்னாப்பிரிக்கா அடித்தது. பவுண்டரிகள் மூலம் மட்டும் அந்த அணி 218 ரன்களை குவித்துள்ளது. குறிப்பாக, கடைசி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்களை அந்த அணி குவித்துள்ளது.
மேலும், உலகக் கோப்பை தொடரில் ஒரே இன்னிங்ஸில் அதிகபட்ச சிக்ஸர்களை தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியில் அடித்துள்ளது. மேலும் ஒருநாள் அரங்கில் தொடர்ந்து 7 ஏழு முதல் பேட்டிங் செய்யும்போதெல்லாம் 300+ ரன்களை தென்னாப்பிரிக்கா அடித்துள்ளது. மேலும், உலகக் கோப்பையில் அந்த அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்துள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் இரண்டாம் பேட்டிங் செய்து அதிர்ச்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ