ICC ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராகிறார் சவுரவ் கங்குலி

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் அனில் கும்ப்ளே பதவி விலகல்; பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராகிறார்...  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 17, 2021, 05:18 PM IST
  • ICC ஆண்கள் கிரிக்கெட் கமிட்டி தலைவர் அணில் கும்ப்ளே பதவி விலகினார்
  • புதிய தலைவராகிறார் சவுரவ் கங்குலி
  • கங்குலியின் சக வீரர் கும்ப்ளே
ICC ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராகிறார் சவுரவ் கங்குலி   title=

புதுடெல்லி: ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி புதன்கிழமை (நவம்பர் 17, 2021) உறுதி செய்தது.​

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் அனில் கும்ப்ளே பதவி விலகுகிறார். அவருடைய சக வீரரும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராகிறார்...  

"ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே கூறினார். "உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகவும், பின்னர் சிறந்த நிர்வாகியாகவும் செயல்பட்டு வரும் அவரது அனுபவம், ஐ.சி.சிக்கு உதவியாக இருக்கும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் அனிலின் சிறந்த தலைமைத்துவத்திற்கும், சர்வதேச விளையாட்டை மேலும் மேம்படுத்தியதற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கிரெக் பார்க்லே தெரிவித்தார்.

ஐசிசி வாரியம் (ICC Board) செவ்வாயன்று பல முக்கிய முடிவுகளை எடுத்தது, சமீபத்திய அரசாங்க மாற்றத்திற்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டின் நிலையை மறுபரிசீலனை செய்ய ஒரு பணிக்குழுவை அமைப்பது தொடர்பான முடிவும் அதில் மிகவும் முக்கியமானது. 

READ ALSO | இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்

 "ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க ஐசிசி வாரியம் உறுதிபூண்டுள்ளது" என்று பார்க்லே கூறினார். 

இரண்டு வருட காலத்திற்கு ஒன்பது அணிகள் விளையாடும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (Cricket Test Match) தற்போதைய வடிவத்தை கடைப்பிடிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.  2027 ஆம் ஆண்டுக்கான ODI உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை மீண்டும் 14 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஐசிசி மகளிர் கிரிக்கெட் கமிட்டியில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜானி கிரேவ்-அ நியமிக்க ஐ.சி.சி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐசிசியின் கூற்றுப்படி, பெண்கள் கிரிக்கெட்டிலும் முதல் தர நிலை மற்றும் பட்டியல் A வகைப்பாடு பயன்படுத்தப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.

ALSO READ | இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவின் சாதனை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News