INDvsSA: அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை அள்ளிய ஷர்துல்..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 4, 2022, 07:17 PM IST
  • ஜோகனஸ்பெர்கில் இந்தியா - தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் போட்டியில் மோதல்
  • இந்திய அணி வீரர் ஷர்துல் தாக்கூர் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
  • ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை எடுத்த 6வது இந்தியர்
INDvsSA: அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை அள்ளிய ஷர்துல்..! title=

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க் (Johannesburg) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்ஷிப்பை ஏற்ற கே.எல்.ராகுல் பொறுப்பாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தார். அவருக்கு பின் வந்த மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. 

ALSO READ | தள்ளிப்போகிறதா ஐபிஎல் ஏலம்? புதிய அணிகளின் நிலைமை என்ன?

கடும் நெருக்கடியில் இருக்கும் ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும், புஜாரா 3 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மிடில் ஆர்டரில் பன்ட் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் முறையே 17 மற்றும் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் களமிறங்கிய அஸ்வின் சிறப்பாக விளையாடி 40 ரன்கள் சேர்த்தார். அவரின் இந்த பங்களிப்பால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. பும்ரா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

ALSO READ | லெஜண்ட்ஸ் லீக்: சச்சின் இல்லாத இந்திய அணி..! 

அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்திலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தாலும், அடுத்த வந்த வீரர்கள் நிதானமாக விளையாடினர். அவர்களின் விக்கெட்டை எடுக்க இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், ஷர்துல் தாக்கூர் சிறப்பாக பந்துவீச தொடங்கினார். இதனால், சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 62 ரன்கள் எடுத்திருந்த பீட்டர்சன் மற்றும் 51 பவுமா ஆகியோரை துல்லியமாக பந்துவீசி வெளியேற்றினார் ஷர்துல். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும், ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை எடுத்த 6வது இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News